நாகை மாவட்டம் வடக்கு பெய்கைநல்லூர், மற்றும் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடையில் வண்ணம் பூசப்படாததால் இருட்டில் வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை