தர்மபுரி மாவட்டம் ஏரியூர் நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் இருக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரிராஜ், ஏரியூர்.