தர்மபுரி பென்னாகரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருவழி சாலையாக உள்ள இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் மீது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
-கந்தசாமி, குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.