தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதி ராயக்கோட்டை சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இந்த பகுதியில் 4 வங்கிகள் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.