மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு முதல் தொழுதாலங்குடி இடையேயான மஞ்சளாற்றுக்கரை சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளம் இருப்பது தெரியாமல் இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள், அசிக்காடு