தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார் சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணிகண்டன், ஏரியூர், தர்மபுரி.