சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 15:09 GMT

பூதலூர் மின்சார வாரிய துணை மின்நிலையம் அருகில் ஆவாரம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள புதிய பாலத்தின் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையை விட பாலம் சற்று மேடாக உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துகளில் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

-பொதுமக்கள், பூதலூர்.

மேலும் செய்திகள்