குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-05 16:24 GMT

தர்மபுரி மாவட்டம் கோணங்கிநாயகனஅள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த கிராமத்திற்கு வரும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருணாகரன், தர்மபுரி.

மேலும் செய்திகள்