நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் இந்த பகுதி பொது மக்கள் நாகப்பட்டினம் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஒட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும்
பொதுமக்கள், கோகூர்