தர்மபுரி மாவட்டம் ஏரியூர்- பென்னாகரம் பிரதான சாலையில் இருந்து அச்சம்பட்டி, வண்டபட்டியான் காடு, ஆதிதிராவிடர் காலனி, ஒரப்பாச்சியூர், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, ஏரியூர்.