தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை பிரதான நெடுஞ்சாலையில் வத்தலாபுரம் கூட்ரோடு பகுதியில் சாலையின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சதாமுருகன், தர்மபுரி.