தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் உள்ள சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுந்தரம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.