தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வலைகாரப்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக தார்சாலை அமைக்கபடவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகனத்தில் செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சாம்ராஜ், வலைகாரப்பட்டி, தர்மபுரி.