திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் கைகட்டி வலசு உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் சாலையை கடக்க வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொதுமக்கள் கைகாட்டிவலசு.