தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் அருகே நீண்ட காலமாக குறுகிய தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் தரைப்பாலம் மிகவும் குறுகியதாக, ஆற்று பாசன கால்வாய் செல்வதாலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பாலக்கோட்டில் இருந்து 4 ரோடு பிரிவு சாலை, புதூர் மாரியம்மன் கோவில், பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி, பெரியாம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தாக உள்ள தரைப்பாலத்தை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும்.
-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.