தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 5-வது வார்டில் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.