நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட சவுரிபாளையம் பகுதியில் இருந்து மதியம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பழுதடைந்த தார்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளிதரன், மதியம்பட்டி.