தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முனியப்பன் கோவில் தெருவில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாக்கன்கொட்டாய் கிராமத்தில் இருந்து முனியப்பன் கோவில் தெரு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு தார்ச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
-மகேஸ்வரி, பாலக்கோடு, தர்மபுரி.