மூடப்படாத கழிவு நீர் கால்வாய் குழி

Update: 2023-02-01 09:55 GMT


பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல்லடம் பஸ் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய 2 இடங்களில் குழிகள் போடப்பட்டுள்ளது. அந்த குழிகளுக்கு மூடிகள் போடப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேகுழியை உடனே மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


----

மேலும் செய்திகள்