நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சி தீத்தாம் பேட்டை வழியாக ஆழியூர் செல்லும் இணைப்பு சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மேடு, பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கோகூர்