நாமக்கல் கோட்டை ரோட்டில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையையொட்டி சாலை பழுந்தடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சாலையை சரி செய்து சீரமைக்க வேண்டும்.
-காசி, நாமக்கல்.