மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலுக்கு ஆபத்தான சாலை வளைவு உள்ளது. வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் பக்தர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி கோவில் அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் குத்தாலம்