நாகை மாவட்டம் பாலையூரில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்செல்வன், பாலையூர்.