தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பு சாலையில் இருந்து சாமிசெட்டிபட்டி ஊராட்சி மானியதஅள்ளி சந்திப்பு வரை உள்ள தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த தார் சாலை குண்டும் குழியுமாக மாறி, ஜல்லிக்கற்கள் முழுமையாக ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனி, சாமிசெட்டிபட்டி, தர்மபுரி.