தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நெக்குந்தி முதல் புதுப்பட்டி கிராமம் வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமானதாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை கொப்பலூர், நரசிபுரம், புதுப்பட்டி, எட்டிக்கூலி ஆகிய கிராமத்திலிருந்து பண்டஅள்ளி பள்ளி மற்றும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை வழியாக 3 அரசு பஸ்கள் செல்கின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தாமோதரன், நல்லம்பள்ளி, தர்மபுரி.