தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு தாண்டவ உடையார் தெருவில் நீண்ட நாட்களாக சிமெண்டு சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சிமெண்டு சாலையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முத்து, மாரண்டஅள்ளி, தர்மபுரி.