மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு முதல் தேரழுந்தூர் செல்லும் சாலை குண்டும்,குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் மேடு பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அசிக்காடு கிராம பொதுமக்கள்.