தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டியில் இருந்து சிட்லிங் செல்லும் தார்சாலை மழையால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அதேபோல வளைவுகளில் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து சாலையை மறைத்துள்ளது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியாததால் வாகனங்கள் அடிக்கடி மோதிக் கொள்கிறது. எனவே தார்சாலையை புதுப்பிக்கவும், சாலையின் வளைவுகளில் உள்ள முட்புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பழகன், கோட்டப்பட்டி, தர்மபுரி.