தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஜங்காளப்பட்டி கிராமத்தில் இருந்து அரூர் போகும் வழியில் கவரிமலை சாலை உள்ளது. அந்த சாலை தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. 6 மாத காலமாக இதே நிலையில் இருப்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.
-சூர்யா, ஓசூர்.