தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள 15-வது வார்டு முனியப்பன் கோவில் தெருவில் சாலை முழுவதும் சேதம் அடைந்து தற்போது மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி முனியப்பன் கோவில் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ?
-சின்னசாமி, பாலக்கோடு, தர்மபுரி.