சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி ரோடு மற்றும் தாதகப்பட்டியில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டன. பின்னர் அவை சீரமைக்கப்பட வில்லை. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே குழிகளை மூடி, சாலைகளை சீரமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிகண்டன், சேலம்.