குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 14:27 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலை தபால் நிலையம் அருகே சமீபத்தில் டெலிபோன் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தபள்ளம் சரியாக மூடப்படாததால் மிகவும் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்

சாலை வசதி