தஞ்சை மாவட்டம் வயலூர் அருகே ராமாபுரம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சீரமைக்காமல் அப்படியே பாதியில் விட்டு விட்டனர். இதனால் இருசக்கர் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதீஷ்கண்ணன்,தஞ்சாவூர்