தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான வீதிகள் சிமெண்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில், மண்ணரிப்பு ஏற்பட்டு பயணிக்கவே முடியாத அளவில் வீதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், தர்மபுரி.