நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்

Update: 2022-09-28 16:51 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஏ.பள்ளிப்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கிராமத்தின் வழியாக சேலம்- சென்னை நெடுஞ்சாலை செல்கிறது. பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியாக இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து சேலம், சென்னை, திருவண்ணாமலை அரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் நின்று செல்கிறது. அவ்வாறு வெளியூர் செல்ல இந்த பஸ்நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் நிழற் கூடம் இல்லாத காரணத்தினால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், ஏ.பள்ளிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்