தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி, சீலநாயக்கனூர், முதுகம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய தார் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுவதால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
-இந்திரகுமார், ஏரியூர், தர்மபுரி.