வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-14 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலை மிகவும் குறுகலாக உள்ளதாலும், அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தாலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே வருவாய் அலுவலகம் அருகே குறுகலான பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியன், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்