நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆமப்பாறையில் இருந்து எஸ்.வாழவந்தி- ஆரியூர் இணைப்பு வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-ராமசாமி, ஆமப்பாறை, நாமக்கல்.