ஜல்லிகற்களாக மாறிய தார்சாலை

Update: 2022-09-25 16:15 GMT

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய 2 ஊராட்சிகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது வெத்தலக்காரன்பள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் தார்சாலை சேதமடைந்து, பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம், வெத்தலக்காரன்பள்ளம், தர்மபுரி.

மேலும் செய்திகள்