தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி பனந்தோப்பில் இருந்து ஏரிகோடி வரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு தார்சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வழியாக பள்ளி கல்லூரிக்கு வாகனங்களில் செல்லும் மாணவர்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே தார்சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், தர்மபுரி.