சேலம் மேச்சேரி ஒன்றியம் பள்ளிப்பட்டி கிராமம் நாகோசிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.
தேவராஜ், நாகோசிப்பட்டி, சேலம்.