புதுப்பிக்கப்பட வேண்டிய சிமெண்டு சாலை

Update: 2022-09-21 16:03 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 14-வது வார்டு மசூதி இருக்கும் பகுதியில் அக்ரஹார தெருவில் சிமெண்டு சாலை போடப்பட்டது. சாலையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வாகனத்தில் செல்லவும், நடந்து செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் இந்த பகுதியில் சிமெண்டு சாலையை புதுப்பிக்க வேண்டும்.

-ராஜகோபால், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்