சுடுகாட்டிற்கு பாதை வேண்டும்

Update: 2022-09-21 13:27 GMT


தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சென்னியவிடுதி ஊராட்சி தோப்ப நாயகம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனை மேம்படுத்தும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிறகு தொடர் பணிகள் மேற்கொள்ளப்படாமல் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களுக்கு இடையே புல் மண்டி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எ னவே தோப்பநாயகம் சுடுகாடு சாலையினை விரைவாக சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருவோணம்

மேலும் செய்திகள்