தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் சாலையோரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த விபத்துகளை தடுக்க சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.சந்தோஷ், இந்திரா நகர், ஏரியூர்.