சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ளது பச்சமலை. இங்கு 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் இருந்து மாவட்ட தலைநகரம் சேலம் செல்ல இங்குள்ள பொதுமக்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டாப் செங்காட்டுப்பட்டி என்ற மலைக்கிராமத்திற்கு வந்து அங்கிருந்து தம்மம்பட்டி வழியாகத்தான் சென்று வர வேண்டும். இதில் டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து சோபனபுரம் வரையிலான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.
-சரவணன்,
பச்சமலை,
சேலம்.