தஞ்சை-நாகை சாலையில் சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை அறைகுறையாக சீரமைத்ததால், வாகன போக்குவரத்து தொடங்கியவுடன் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டு விடுகிறது. இது போல் நான்கு முறை நடந்து விட்டது. இதனால் வாகனங்கள் ஒரே திசையில் செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியை சரியாக விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சோழன்நகர்