அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

Update: 2022-09-18 16:17 GMT

தர்மபுரி முதல் திருவண்ணாமலை வரை அரூர் வழியாக நான்கு வழிசாலை பணிகள் நடந்து வருகிறது. அதற்காக ஆங்காங்கே சாலைகளில் பாலங்கள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதில் செம்மனஹள்ளி அருகே கம்பிகள் ரோட்டில் நீட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்