விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-07-13 14:54 GMT

நாகை மாவட்டம் நாகூர் கடற்கரை செல்லும் சாலையில் முடுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பொதுமக்கள்.நாகூர்

மேலும் செய்திகள்