தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி கூலன்கொட்டாய் கிராமத்தில் மண் சாலை உள்ளது. மழை காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்துக்கு உபயோகமற்றதாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதி மக்கள் சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
-ரமேஷ், தர்மபுரி.