தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-14 15:03 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பஸ் நிலையம் முன்பு உள்ள இந்திரா நினைவு குடியிருப்பில் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தார்சாலையாக அமைக்க பல முறை மனு அளித்தும், குறைதீர்ப்பு முகாம்களில் குறைகளை கூறியும் எந்த ஒரு பயனும் இல்லை. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.

-த.சந்தோஷ், இந்திரா நகர், ஏரியூர்.

மேலும் செய்திகள்